Sunday, May 22, 2016

திருமணத்திற்கு நாள் பார்க்கும் விதிகள்

திருமணத்திற்கு நாள் பார்க்கும் விதிகள்
திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய
விதிகள்
1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில்
வருவது.)
2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர
மாதங்களில்
திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது
என்பது மூன்றாவது விதி.
4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள்
மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.
…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய
சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்
5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப
திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது
6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க
வேண்டும்.
7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற
காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண
லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம்
பெற்றிருக்கக்கூடாது.
9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல்
இருப்பது மிகமிக முக்கியமான விதி.
10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக
வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும்
கல்யாணம் பண்ணக்கூடாது.
- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து
சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர்
குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள
பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்

அஸ்தங்கம் -ஜோதிடர் பாலு சர்மாஅவர்கள்

புத, சுக், செ, குரு, சனி மட்டுமல்ல சந்திரனுக்கும் கிரக அஸ்தங்கம் உண்டு. இது தொடர்பாக மூலநூலான சூரிய சித்தாந்தத்தில் 12 மற்றும் 13 அத்யாயம் கூறுவதை இங்கு காணலாம்.
கிரக அஸ்தங்கம் - உதயம் & அஸ்தமனம் (Helical Rising and Setting)
சூரிய மண்டலத்தில் உள்ள எந்த ஒரு கிரகமும், குறுங்கோளும், வின்கல்லும், வால்நட்சத்திரமும் சூரியனுக்கு அருகில் குறிப்பிட்ட கோணஅளவு நெருங்கும் பொழுது
அது சூரியனின் பிரகாசத்தால் மணித கண்களுக்கு தெரிவதில்லை இதையே அஸ்தங்கம் என்று அழைக்கிறோம்.
புதன்(12, & 14), சுக்கிரன்(8), செவ்வாய்( 17), குரு (11), சனி (15) அடைப்பில் குறிப்பிட்ட நிஜ கோண அளவில் அருகில் வரும் பொழுது அது கண்களுக்கு புலப்படுவதில்லை
ஆயினும் (நல்ல பார்வையுடயவர்களுக்கு இது வேறுபடும்). நவீன உலகில் புற ஊதா கதிர் தொலைநோக்கி(ultraviolet telescope), ரேடியோ தொலை நோக்கி (Radio telescope), மூலமாக அதன் இருப்பிடத்தை அறிய முடியும்.
கிரக யுத்தம், (War) Conjenction
மேற்குறிப்பிட் 5 கிரகங்களும் ஓன்றுக்கொன்று அருகில் வரும் பொழுது நிகழ்வது கிரக யுத்தம்
கிரக சமாகமம் (meeting)
மேற்குறிப்பிட் 5 கிரகங்களும் சந்திரனுடன் இணைவது சமாகமம் ஆகும் (சூரியனுடன் இணைந்தால் அஸ்தங்கம்)
சரி சந்திரனுக்கு அஸ்தங்கம் உண்டா என்றால் அதுதான் அமாவாசை, (சூரிய ஒளியால் ஒரு கிரகம் மறைக்கப்படுவது அஸ்தங்கம் : சூ.சித் - அத்: 12)
சந்திர அஸ்தங்கம் குறித்த பலநூல்களிலும் தகவல் உள்ளது அதில் சந்திரன் ஒரு திதி பிரமாணம்(12 பாகை) அளவிற்கு அஸ்தங்க தோஷம் கொண்டது,
அதாகில் அமாவாசைக்கு முன்னர் தேய்பிறை சதுர்தசி முதல் அமாவாசைக்கு பின்னர் சுக்ல பிரதமை வரை அஸ்தங்க தோஷம் உள்ளது. எனவேதான் கிருஷ்ண சதுர்தசி, அமாவாசை, சுக்ல பிரதமையும் சுபகாரியம் செய்ய விலக்கப்பட்டநாளாகும்.(இது ஜோதிஷ நூல்படி)
சூரிய கிரகணம் (Solar Eclipse) அஸ்தங்கமா?
சூரிய பிரகாசத்தினால் கிரகம் மறைந்தால் அது அஸ்தங்கம், சூரியனே மறைக்கப்பட்டால் அதுவும் அஸ்தங்கம்தான் ஆயினும் பூரண சூரியகிரகணம் மட்டுமே அஸ்தங்கம் ஆகும்.
குறிப்பு: எனவேதான் கிரகண மாதம் சுபம் விலக்கப்படுகிறது, கிரகணம் அன்று சிரார்தம் கூட கிரகணம் முடிந்த பின்னர் செய்யப்படுகிறது
கிரக கடவு (Transit)அஸ்தங்கமா?
புதன், சுக்கிரன் அஸ்தங்ககாலத்தில் சூரிய விட்டத்தை கடப்பது அஸ்தங்கம் மட்டுமல்ல இதுவும் ஒருவித கிரக கிரகணமாகவும் (Planet Eclipse) கொள்ளவும். இதை கடவு (Planet Transit) என்று அழைக்கிறார்கள்
அஸ்தங்கம் கிரகணம் இடையே என்ன வேறுபாடு Combustion & Eclipse
அஸ்தங்கம் என்பது பிரகாசமான சூரிய ஒளியால் ஒரு வானியல் பொருள்(கோள், நிலவு, வின்கல்) கண்களுக்கு புலப்படாமல் போவதாகும்.
கிரகணம் என்பது சூரியனை சந்திரன் மறைப்பது அல்லது சந்திரன் மீது விழும் சூரிய ஒளியை பூமி நேர்கோட்டில் வருகைதந்து மறைப்பதாகும்.
இந்த விதி மற்ற நிலவுடன் கூடிய கிரகங்களுக்கும் பொருந்தும்.
வானியல் மறைவு (Occultation)
ஒரு வானியல் பொருளை மற்றொரு வானியல் பொருள் மறைத்தலாகும்.
உதாரணம் நட்சத்திரம், அல்லது ஒரு கோளை நிலவு மறைப்பதாகும்
பஞ்சாங்கத்தி்ல் அமாவாசை அன்று நேத்திரன்-ஜீவன் குருடு எனும் நிலையில் "0" என்று குறிப்படிப்பட்டிருக்கும் சந்திரனின் மீது விழும் ஒளியின் அளவு, மற்றும் சூரிய நிலையே நேத்திர-ஜீவன்.
;நேத்திரம், ஜீவன் இல்லை எனெனில் அன்று திருமணம் செய்ய உகந்தநாளல்ல (அதாகில் சந்திரன் சூரிய சேர்கையால் அஸ்தங்கம் தோஷம் இருப்பதால்)
பாலு சரவண சர்மா, ஸ்ரீதணிகை பஞ்சாங்கம், Tambaram Astrologer
www.prohithar.com
www.thanigaipanchangam.com

ஆண்களுக்கு மட்டும்

ஆண்களுக்கு மட்டும்
ஆண்மை குறைபாடு என்பது தீர்க்க முடியாத பிரச்சனை என்பதை முதலில் மனதிலிருந்து நீக்கிவிடுங்கள்
உங்களிடத்தில் ஆண்மைகுறைபாடு ஏற்படுமுன் உண்டாகும் சில அறிகுறிகளை கவனித்தால் போதும் இந்த கவலையிலிருந்து விடுபடலாம் ,கடைகளில் -விளம்பரங்களில் காணப்படும் கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிடுவதை முதலில் நிறுத்தி கொள்வது நல்லது ,இரண்டாவது ஆண்மை குறைபாடுகளை போக்கிடும் உணவுகளை உட்கொள்ளவும், மேலும் ஆண்மைகுறைபாடுகளுக்கான காரணங்களை தவிர்க்க வேண்டும்
ஆண்மை குறைபாடுகளுக்கான அறிகுறிகள்:-
-------------------------------------------------------------------
1)கோபமும் எரிச்சலும் மேலோங்கி காணப்படும்
2) உடலில் வேர்வை அதிகரிக்கும்
3) மர்ம ஸ்தான பகுதிகளில் அழுக்குகள் அதிகமாகும்
4) மர்ம ஸ்தானத்தில் பிசுபிசுப்பு இருந்துக்கொண்டே இருக்கும்
5) நீர்கடுப்பு அடிக்கடி ஏற்படும்
6) கால் –ஆடுசதை பகுதிகளில் வலிகளும் பிடிப்புகளும் உண்டாகும்
7) முதுகு – பின் கழுத்து-தோள் பகுதிகளில் வலிகளும் பிடிப்புகளும் உண்டாகும்
8) அடிக்கடி சோர்வாக காணப்படுவீர்கள்
9) மனைவியிடம் சம்பந்தமில்லாமல் கோபப்படுவீர்கள்
10) இரவு நேரங்களில் தூக்கம் வராது பகலில் தூக்கம் வரும்
11) உடலில் அரிப்புகள் உண்டாகும் ,உடல் முறுக்கி முறுக்கி வலிக்கும்
12) உடலில் வறட்சி காணப்படும் தாகம் அதிகமாகும்
13) பிருஷ்டங்கள் சுருங்க ஆரம்பிக்கும் ,அடிக்கடி அரிப்புகள் உண்டாகும்
14) சில நேரங்களில் தள்ளாட வைக்கும்
15) ஆண்குறிகளில் வெடிப்புகளும் அரிப்புகளும் உண்டாகும்
மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் தொடர்ந்து காணப்பட்டால் ஆண்மை குறைபாடு உள்ளதாக கொள்ளவும் ,ஒவ்வொரு தனி ஆணுக்கும் வெவ்வேறு காரணங்களால் ஆண்மை குறைபாடு ஏற்படுவதால் அதற்கு தகுந்த ஆலோசனைகள் பெற விரும்புவர்கள் என்னுடைய இன் பாக்ஸில் கேட்கவும் ரகசியங்கள் பாதுக்காக்க படும் சதயம் M.மீனாட்சி சுந்தரம் -9894541577