Thursday, September 12, 2013

The Panchang

The Panchang :
The Hindus follow the Panchang which is a spiritual and scientific calendar .It provides a listing of festivals, weather predictions, events, epidemics and personal fortune. The word “Panch” means five and “ang” means aspect.
Panchang is an ancient Indian Calendar system based on Astrological facts. Calculations are done based on the position and movement of the planets, stars and constellations. These are used to determine the most ideal or auspicious time for carrying out various activities like getting married, stepping into a new home, attending work for the first time, etc. The Panchang is also a readymade guide that gives us the dates of important hindu festivals. It gives the exact time when a particular task can be undertaken to reap maximum benefits. It defines a particular time of a day using the five parameters – the day, the tithi, the star, the yoga and the karana corresponding to that day.
Panchang- is it a necessity?
* Any new venture started on an appropriate tithi will fetch prosperity.
* Any deed done on the right day of the week will enhance longevity.
* Any deed done on a day with a favorable star will alleviate a person from all sorts of ill effects.
* Diseases will disappear if deeds are performed at a time with good and beneficial yoga.
* A deed done during good and beneficial karana will help in the achievement of the objective and remove hurdles and impediments.
The Panchang is a tool that can maximize the chances of your efforts yielding positive results and help you achieve your goals. You can use Panchang as a ready reckoner for important days and also to tell you the most ideal time for you to start on your ventures so you get the most out of them.
Constitution of Panchang:
The time between two consecutive risings of the sun is the Solar day .
The time between two consecutive risings of the moon is taken as Lunar Day or Tithi.
The panchang measures time in lunar months whose names reveal the secret path of stars and constellations. The face of the new moon is called “Amavasya” and it ushers in the new month. The first fortnight of the full moon is known as Shuklapaksha or “the bright half” as the moon waxes; while the dark half fortnight of the month is called Krishnapaksha during which the moon wanes. Poornima marks the end of Shuklapaksha.

Months in the lunar year according to the Panchang:
The Hindu calendar usually has 12 months each given the name of the solar month in which it begins. However there may even be 13 months as each month begins with the new moon.
When two moons occur in the same solar month, the two lunar months will both be known by the same name, but will have “adhika” placed before the name of the first month. Occasionally a solar month may occur with no moon., when this happens, the solar month is known as a “ksaya” month.
The twelve months of the lunar year correspond to the following:
۞ Chaitra (March – April)
۞ Vaisakh (April – May)
۞ Jyeshta (May – June)
۞ Aashaadh (June – July)
۞ Shravan (July – August)
۞ Bhadra (August – September)
۞ Ashwin (September – October)
۞ Kartik (October – November)
۞ Margasheersh (November – December)
۞ Paush (December – January)
۞ Maagh (January – February)
۞ Phagun (February – March)
The Days in the Lunar year are:
The Panchang lists four weeks of seven days for a lunar month, identified with planets and gods.

Panchangam

Panchangam
The Panchanga is a combination of five factors that show time namely Vaara (day of week), Nakshatra, Tithi, Karana and Nithyayoga.

The time from one sunrise to the other is called Vaara. 
There are 7 weekdays: 
Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday and Saturday

27 stars
Aswini, Bharani, Krittika, Rohini, Mrigasira, Ardra, Punarvasu, Pushyami, Ashlesha, Makha, Purvaphalguni, Utaraphalguni, Hasta, Chitra, Swati, Vishakha, Anuradha, Jyeshta, Moola, Purvashada, Uttarashada, Shravana, Dhanishta, Satabhisha, Purvabhadra, Uttarabhadra, Revati
Tithi                                                                            
Tithi is the value when the longitude of Sun is deducted from the longitude of Moon. Nithyayogam is the value of addition of these two longitudes. There are 15 Tithis, namely Pradhama, Dwitheeya, Thritheeya, Chathurthi, Panchami, Shashthi, Saptami, Ashtami, Navami, Dasami, Ekadasi, Dwadasi, Thrayodasi, Chaturdasi, Pournami/Amavasya. Karanam Karanam is half of Tithi. There are 28 Tithis from Shukla Pradhama Uttarashada to Krishna Chathurdasi Purvashada
Karanams
So there are 56 Karanams. Charakaranas 1) Lion (Bava),   2) Tiger (Balava),  3)  Pig    (Koulava),   4)  Ass   (Taitila),  5)  Elephant (Gara),  6)  Cow  (Vanija),    7)  Vishti (Bhadra). These 7 Charakaranas are repeated 8 times. The four Karanas including Shukla Pradhama's Purvashada, Krishna Chathurdasi's Uttarashada and the two parts of Amavasi are permanent karanas. These come only once. They are 1) Bird (Sakuna) 2) Four-legged animal (Chatushpada)  3) Snake (Naga)  4) Worm (Kimstugna)
Nithyayoga

1) Vishkambha, 2) Preethi, 3) Ayushman, 4) Soubhagya, 5) Shobhana, 6) Athiganda, 7) Sukarma, 8) Dhrithi, 9) Soolam, 10) Ganda, 11) Vridhi, 12) Dhruva, 13) Vyaghatha, 14) Harshana, 15) Vajra, 16) Siddhi, 17) Vyathipatha, 18) Variyan, 19) Parigha, 20) Shiva, 21) Siddha, 22) Sadhya, 23) Subhra, 24) Braahma,  25) Mahendra, 26) Vaidhruthi, 27) Shubha Their length, as the length of the stars, is 13 degree 20 minutes. Nithyayoga is the sum of the longitudes of Sun and Moon. 

Friday, August 9, 2013

அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் ?

அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் 



விநாயகரின் மூல மந்திரம்ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா
இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும்.

அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும். செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது.

கணபதியை மட்டும் வழிபடுபவர்கள் கணபதி உபாசகர்கள் என அழைக்கப்படுகிறார்கள். கர்ண வழிபாடு என்று இதைக் கூறுவர். கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.சிவப்பு, பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது.துளசியை விநாயகருக்கு அணிவிக்கக்கூடாது.

கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00க்குள் ஜபிப்பது மிக நன்று என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

விநாயகரை தேய்பிறை சதுர்த்தி தோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும்.அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று. மாசி மாதம் வரும் சதுர்த்தி செவ்வாய்க்கிழமையன்று(தகுந்த ஜோதிடரை அணுகி உரிய நாளை அறிக) துவங்கி ஓராண்டு சங்கடஹர சதுர்த்தியை மாதந்தோறும் பின்பற்றிவர வேண்டும்.இதனை செவ்வாய்க் கிரக அதிபதி பின்பற்றினார்.



வன்னிமர விநாயகருக்கு அரிசி போடுவதன் மூலம் , நீங்கள் ஏழரை சனி, அஷ்டமச் சனி இலிருந்து தப்பிக்கலாம். இதைப் பற்றி நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். 


உச்சிஷ்ட கணபதி மந்திரம்

ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய,லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா

வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகளால் இவருக்கு ஹோமம் செய்ய வேண்டும்.


கடன் தீர கணபதி மந்திரம்

ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா
ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல
பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா

கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்துவிடும்.



மஹாஹஸ்தி விநாயகர்

பெரிய துதிக்கையை உடைய இவர் பெரும் தனத்தை (அதாவது கோடிக்கணக்கில் ரூபாய்களாக) அள்ளி வீசுபவராக இருக்கிறார்.
அப்படி நமக்க இவரது அருள் கிடைக்க பின்வரும் மந்திரத்தை லட்ச உருவேற்றினால் போதும்.நமது பாவங்களும் தீரும்.செல்வமும் ஞானமும் நமக்குக் கிடைத்துவிடும்.

ஓம் ஆதூன இந்த்ர க்ஷீமந்தம் சித்ரம் க்ராபம் ஸ்ங்க்ருபாய
மஹாஹஸ்தி தக்ஷ்ணேன

வாஞ்சா கல்பலதா கணபதி

நமது சகல விருப்பங்களையும் அள்ளி வழங்குவதால் இவருக்கு வாஞ்சை கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.

பின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரவும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்
ஐம் கஏஈ லஹ்ரீம்
தத்ஸவிதர் வரேண்யம் கணபதயே
க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ
வரவரத சவு ஸஹல ஹ்ரீம்
த்யோயோநப்ர சோதயாத்
ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா

ஓகோனு ஒரு பிசினெஸ் ஓடிக்கிட்டு இருக்கும். திடீர்னு சரிய ஆரம்பிக்கும். புதுசா ஒரு பிசினஸ் ஆரம்பிக்கணும்னு நெனைச்சு, குட்டிக்கரணம் அடிச்சுப் பார்ப்பீங்க. இதோ, இதோன்னு தா காட்டிக்கிட்டே இருக்கும்.  இப்படி இருந்தா, உங்களுக்கு கேது  தசை நடக்குதானு கொஞ்சம் செக் பண்ணிப் பாருங்க.


வாழ்க்கைங்கிறது ஒரு கட்டுமர கடல் பயணம்தான். அலைகளுக்கு ஏற்ற ஆட்டம் இருக்கத்தான் செய்யும். ஆனாலும், எத்தனை பேர் மீன் பிடிச்சுட்டு வர்ராங்க. விழிப்புணர்வு, திறமை இரண்டும் இருந்தாத்தான் ஜெயிக்க முடியும்.   

 நான் அடிக்கடி சொல்ற விஷயங்களில் ஒன்று, நவகிரகங்களில் பெரும் வலிமை வாய்ந்த கிரகம் கேது. என்னடா இப்படி சொல்றாரேன்னு நீங்க நினைக்கலாம். மேலே படிங்க. அப்புறம் நீங்களே சொல்வீங்க எப்படினு? 

 கேது , ராகு, செவ்வாய் , சனி , சூரியன் - இந்த வரிசையிலேதான் , கெடுதல் பலன்கள் அதிகமா நடக்குது. இன்னைக்கு நடைமுறையிலே சனி பற்றி ஓரளவுக்கு எல்லோருக்குமே தெரிஞ்சு இருக்கு. ஆனா, அவருக்கும் மேலே ஒரு மூன்று தாதாக்கள் இருக்கிறாங்க. 

நம்ம இணையதளத்துலே ஏற்கனவே, ராகு தசை , செவ்வாய் தசை பற்றி கொஞ்சம் விரிவா பார்த்து இருக்கோம். இன்னைக்கு  கேது தசை பற்றி கொஞ்சம்  சுருக்கமா பார்க்கலாம்.

 கேது பகவான் ஞான காரகன். அதாவது ஞானமார்க்க ஈடுபாட்டை வளர்ப்பவர். அதாவது கோவில், குளம் ,ஆன்மிகம் இப்படி ஈடுபாட்டை வளர்க்கும். நல்லது தானே சார், இது எதுக்கு கெடுதல்னு நெனைக்கனும்னு நீங்க கேட்கிறது புரியுது. 

உங்களை அப்படியே தோள்லே கைபோட்டு , ஈடுபாடு வர வைக்கிறது இல்லை . அடி, அடி, செமத்தியான அடி. விரக்தி. வேதனை, அவமானம் எல்லாம் கொடுத்திட்டு , அடத் தூ, இப்படி ஒரு பொழைப்பு பொழைக்கனுமானு உங்களை நினைக்க வைச்சுட்டு , அதுக்கு அப்புறம் வாழ்க்கைனா என்னனு உங்களுக்கு ஞானம் புகட்டுகிறார். (வெளங்கின மாதிரி தான் )
நீங்க எவ்வளவு பெரிய பிஸ்தாவா இருந்தாலும், கேது தசை வர்றப்போ , கொஞ்சம் உஷாரா இருந்துக்கிடுவது நல்லது. 

மரணத்தைவிட கொடியது என்ன தெரியுமா? நம்மளை உயிருக்கு உயிரா நேசிச்ச ஜீவன்கள் கூட மறந்து போற அளவுக்கு ஒரு வாழ்க்கை வாழுறது.
யாரை நீங்க நேசித்தீர்களோ , அவர்கள் உங்களை வெறுக்கும்படி ஒரு மட்டமான வாழ்க்கை வாழும் சூழ்நிலை ஏற்படுவது.  

கணவன் - மனைவி உறவு விரிசல், இந்த கேது தசையில் சர்வ சாதாரணம். சின்ன , சின்ன சண்டை இல்லை , விவாக ரத்து வரை , கோர்ட் , கேஸ் என்று  அலைய வைக்கும். நேசித்த ஒரு நெஞ்சம் வஞ்சிக்குமா என்று எண்ணி, எண்ணி மாய்ந்து போக வேண்டி வரும்.


அஸ்வினி, மகம், மூலம் என்று மூன்று நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் , பிறக்கும்போதே கேது தசை நடக்கப் பிறந்து இருப்பர். நல்ல, செழிப்பா நீங்க பிறக்குறதுக்கு முன்னாலே வரை அந்த குடும்பம் இருந்து இருக்கும். கேது தசை முடியறதுக்குள்ளே ஒரு சின்ன விபத்து. அப்படியே கேது முடிஞ்சிடும். அப்பாடா.. ! பெரிய நிம்மதி. பிறக்கும்போது குரு, சனி , புதன் தசை நடக்கப் பெற்றவர்கள் - மத்திம வயதில் கேது தசையை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு தான் முழுமையா , இதோட பாதிப்பு தெரிய வரும்.  

ஏழு வருஷம் . கேது தசை நடக்குது. யாருக்குமே நல்லது நடக்காதா ? நடக்கும். எப்படி?


நீங்களும் நல்லவனா மாறுனாதான் உண்டு. வேற வழியில்லை பாஸ் ! உங்க மனசு அறிஞ்சு , நீங்க தப்பு னு தெரிஞ்சு பண்ணுற தப்பான விஷயங்களை விட்டாலே போதும். 

 பெரிய பெரிய கோவில் கட்டுற விஷயம் கூட நீங்க கேது தசையில் செய்ய முடியும். கேது உங்களுக்கு நடந்தால் , ஆலய புனருத்தாரணம், கும்பாபிசேகம் செய்யும் விஷயங்களுக்கு உங்களால் முடிந்த அளவு உதவி செய்யுங்கள். அது மிகப் பெரிய புண்ணியம். உங்களுக்கு வர விருக்கும் கெடுதல்கள் அனைத்தும் ஓடிவிடும். கேது தசையில் , இறைவனையே நேரில் தரிசனம் செய்யக்கூடிய பாக்கியம் கூட கிடைக்கும். 

கேது உங்கள் லக்கினத்தில் இருந்து எந்த வீட்டில் இருக்கிறாரோ, தசை நடத்தும்போது - அந்த வீட்டிற்குரிய பலன்களை கொடுக்கிறார்.
லக்கினத்தில் இருந்து இரண்டு எனில் , தனம் ,குடும்பம் , கல்வி , வாக்கு - இப்படி. அதாவது , வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியாம , ஊரெல்லாம் வம்பு சண்டை போட்டுக்கிட்டு , குடும்பத்துக்குள்ளே நிம்மதி இல்லாம , குடும்பத்தையே பிரிஞ்சு ... இப்படி... 


கேதுவுக்கு உரிய தெய்வம் - விநாயகப் பெருமான். விநாயகரை முறைப்படி வழிபாடு செய்தாலே , உங்கள் சங்கடங்கள் அனைத்தும் தவிர்க்கப்படும். 

நம் ஜோதிட பாடங்களை , பழைய பதிவுகளை திரும்ப ஒரு தடவை பார்த்தீங்கன்னா, கேதுவோட இயல்புகள், காயத்ரி மந்திரம் , ஸ்தலங்கள் எல்லாம் ஏற்கனவே கொடுத்து இருக்கிறோம். 


கேது தசையில் , விநாயகரை கும்பிடுவதன் மூலம் - நீங்கள் எவரையும் வெல்லும் ஆற்றல் பெற முடியும். அந்த இறைவனையே தரிசிக்க முடியும்.
விநாயகரை எப்போ, எப்படி கும்பிடுவது என்ன துதிகள் என்று பார்ப்போம். நமது சர்வ காரிய சித்தி மாலை கட்டுரையில் உள்ள மந்திரங்கள் தவிர்த்து மேலும் சில powerful துதிகளை , சங்கடகர சதுர்த்தி பற்றி சில சிறப்பு தகவல்களை இன்று பார்ப்போம்.  

விநாயகப் பெருமானின் வழிபாட்டில் சதுர்த்தி என்னும் திதி முக்கியமானது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறைக்கு ஒன்றும் தேய்பிறைக்கு ஒன்றுமாக இரண்டு சதுர்த்திகள் வரும். அவற்றில் மிகவும் முக்கியமானதாக ஆவணி மாதத்தில் வளர்பிறையில் வரும் சதுர்த்தியையே கருதி வருகிறோம். நாம் விநாயகச் சதுர்த்தி என்று விமரிசையாகக்  கொண்டாடி வருகின்றோம். அதன் பின் வரும் ஒவ்வொரு வளர்பிறைச் சதுர்த்தியையும் மாதச் சதுர்த்தி என்ற பெயரில் விநாயக வழிபாட்டிற்கு உகந்தவையாகக் கொண்டுள்ளோம். இதுமட்டுன்று  ஒவ்வொரு தேய்பிறையிலும் வரும் சதுர்த்திகளும் முக்கியமானவையே. இவற்றை சங்கடஹர சதுர்த்தி என்று அழைப்பார்கள். விநாயக வழிபாட்டில் இவையும் சிறப்பிடம் பெற்றவைதான். இவ்வகைச் சதுர்த்திகளில் தலையாயது மாசி மாதத்தன்று பெளர்ணமி கழித்து வரும் தேய்பிறைச் சதுர்த்திதான். இதனை மஹாசங்கடஹரசதுர்த்தி என்று அழைக்கிறோம்.

 மாசி மாதம் வரும் சங்கடஹர சதுர்த்தியிலிருந்து மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்திகளின்போது விரதமிருந்து விநாயகரைச் சிறப்பாக வழிபாடு செய்வார்கள்.


 விநாயகருக்கு முப்பத்திரண்டு வடிவங்கள் உண்டு. இவற்றை மூர்த்தி பேதங்கள் என்று கூறுவார்கள். அவற்றில் பதினாறு மிகவும் முக்கியமானவை. அவற்றில் ஒன்று சங்கடநாஸன கணபதியாகும்.


 ஒவ்வொரு வகையான பலனைப் பெறவேண்டி ஒவ்வொரு வகையான விநாயக வடிவங்களை வணங்குவதுண்டு. கடன் நீங்க ருணமோசன கணபதியையும் பணம் வேண்டி லட்சுமி கணபதியையும் வழிபடுவதுண்டு. அந்தந்த வழிபாட்டிற்கு உரிய  தனிப்பட்ட மந்திரங்களும் தோத்திரங்களும் முறைகளும் உண்டு.


 சங்கடங்கள், இக்கட்டுகள், நெருக்கடிகள் தீருவதற்கு சங்கடஹர கணபதியை வணங்குகின்றோம். சங்கடஹர கணபதியை வணங்கியவர்களில் செவ்வாய் கிரகம் எனப்படும் அங்காரகன் முக்கியமானவர். அவரை வழிபட்டுப் பல மங்கலங்களுடன் கிரகப் பதவியையும் 'மங்கலன்' என்னும் சிறப்புப் பெயரையும் விநாயகரிடமிருந்து பெற்றார். ஆகையால் சங்கடஹர சதுர்த்திக்கு 'அங்காரகச் சதுர்த்தி' என்றும் பெயர் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருந்து வழிபட்டால் சங்கடங்கள் தீருவதோடு செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் கெடுதல்களும் தோஷங்களும் நீங்கும்.


 சந்திரனும் விநாயகரைச் சிறப்பாக வழிபட்டுப் பல சிறப்புகளுடன் விநாயகருடைய திருமுடியில் பிறைச் சந்திரனாகவும் நெற்றியில் முழு நிலவுத் திலகமாகவும் விளங்கும் பேறு பெற்றான். விநாயகருக்கு  பாலசந்திரன் என்றும் பெயர் உண்டு. மேலும் சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரனையும் பூஜிக்க வேண்டிய முறையும் உண்டாகியது.


 சங்கடஹர சதுர்த்தியன்று விடியுமுன்பே எழுந்து குளித்து விரதம் இருந்து விநாயகரை வழிபட வேண்டும். அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சந்திரனைப் பார்த்துவிட்டு சந்திரனையும் பூஜித்துவிட்டு உணவு உட்கொள்ள வேண்டும். விரதம் இருக்க முடியாதவர்கள் விநாயகருக்கு உகந்த 'காரியசித்தி மாலை'  என்ற துதியைப் படிக்க வேண்டும். அதனை எட்டு முறை அன்றைய தினம் படிப்பது மேலும் சிறப்பு. 


 சங்கடநாசன கணபதி ஸ்தோத்திரத்தையும் படிக்கலாம்.

இவை வலுவும் ஆற்றலும் மிக்கவை. இரண்டில் ஒன்றைப் படிக்கலாம்.

 முடிந்தவர்கள் இவற்றில் ஒன்றுடன் விநாயகர் கவசத்தையும் படிக்கலாம். விநாயகருடைய முப்பத்திரண்டு வகையான மூர்த்தங்களில் சங்கடஹர கணபதியும் ஒன்று.

  இளஞ்சூரியனைப்  போன்ற நிறத்தோடு நீல நிற ஆடையணிந்து கொண்டு செந்தாமரையில் வீற்றிருப்பார். வலது கரங்களில் அங்குசமும் வரதமும் விளங்கும். இடது மேல் கரத்தில் பாசம் இருக்கும். தொடையின் மீது தன்னுடைய சக்தியை அமர வைத்திருப்பார். செம்மை நிறமுடைய அந்த சக்தி நீல நிற உடையும் ஆபரணங்களும் அணிந்து நீல மலரை ஏந்தியிருப்பார்கள். சங்கடநாஸனார் தமது இடது கீழ்க் கரத்தால் அந்த சக்தியை அணைத்தவாறு பாயசப் பாத்திரத்தைத் தாங்கியிருப்பார்.                'சங்கடஹர கணபதி' என்றும் 'சங்கடநாஸன கணபதி' என்றும் பெயர் பெற்ற இவரைத் தமிழில் நாம் 'தொல்லை நீக்கியார்' என்று அழைக்கிறோம்.


விநாயகரின் தத்துவம் விநாயகர் அட்டகத்தின்மூலம்  இங்கு விளக்கப்படுகிறது.   "காரியசித்தி மாலை" என்றும் இது அழைக்கப்படுகிறது. 


        காரியசித்தி மாலை
1.

பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ 
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்த மறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன் பால் தக வருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றாம்.

2. 

உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ் 
உலகிற் பிறங்கும் விவகாரங்கள் உறாத மேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டுங் களை கண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றாம்.

3. 

இடர்கள் முழுதும் எவன் அருளால் எரி வீழும் பஞ்சு என மாயும் 
தொடரும் உயிர்கள் எவன் அருளால் சுரர் வாழ் பதியும் உறச் செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறு இன்றிக் கருமம் எவனால் முடிவு உறும் அத்
தடவு மருப்புக் கணபதி பொன் சரணம் சரணம் அடைகின்றாம்.

4. 

மூர்த்தி ஆகித் தலம் ஆகி முந்நீர் கங்கை முதலான 
தீர்த்தம் ஆகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

5. 

செய்யும் வினையின் முதல் யாவன் செய்யப்படும் அப் பொருள் யாவன் 
ஐயம் இன்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய் இல் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.

6. 

வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய 
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்கு பர
நாத முடிவில் வீற்று இருக்கும் நாதன் எவன் எண் குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

7. 

மண்ணின் ஓர் ஐங் குணம் ஆகி வதிவான் எவன் நீர் இடை நான்காய் 
நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வான் இடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக் கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.

8. 

பாச அறிவில் பசு அறிவில் பற்றற்கு அரிய பரன் யாவன் 
பாச அறிவும் பசு அறிவும் பயிலப் பணிக்கும் அவன் யாவன்
பாச அறிவும் பசு அறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக் கணபதியத் திகழச் சரணம் அடைகின்றோம்.

நூற்பயன் 

இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினம் மும்மைச் 
சந்திகளில் தோத்திரம் செயினும் சகல கரும சித்தி பெறும்
சிந்தை மகிழச் சுபம் பெறும் எண் தினம் உச்சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர் எண்கால் படிக்கில் அட்ட சித்தி உறும்.

திங்கள் இரண்டு தினந்தோறும் திகழ ஒருபான் முறை ஓதில் 
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத்தொரு முறைமை
பொங்கும் உழுவலால் கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக் கல்வி
துங்க வெறுக்கை முதற் பலவும் தோன்றும் எனச் செப்பினர் மறைந்தார்.        


சங்கஷ்ட நாஸன ஸ்ரீகணேச ஸ்தோத்ரம் 

இந்த ஸ்தோத்ரம் 'நாரத புராணம்' என்னும் உபபுராணத்தில் 
காணப்படுவது.  பதினெட்டுப் புராணங்கள் பற்றி மக்கள் அறிவார்கள்.
இவை போலவே பதினெட்டு உப புராணங்களும் எண்ணற்ற ஸ்தல
புராணங்களும்  உண்டு. 

   
இந்த ஸ்தோத்திரம் சங்கடங்களை நீக்க வல்லது. சங்கடங்களை
நீக்குவதற்கென்று விநாயகமூர்த்தங்களில்  ஒரு விசேஷ வழிபட்டு
மூர்த்தி  இருக்கிறார். 'சங்கடநாஸன கணபதி'  என்பது அவருடைய பெயர்.


சங்கடஹரர் என்று சொல்வார்கள். அவருக்கு உரிய விரதம்
'சங்கடஹர சதுர்த்தி'. சங்கடஹர சதுர்த்தியன்று இந்த தோத்திரத்தைப் படித்து
வழிபடலாம்.     
             
 இதனை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் 
படித்தால் சங்கடங்களும் விக்கினங்களும் நீங்கி அவரவர் கோரிய  பலனைப்
பெறலாம் என்று அந்த புராணம் கூறுகிறது. இந்த தோத்திரத்தில் சங்கடநாசனருக்கு உரிய விசேஷமான பன்னிரண்டு  நாமங்கள் இருக்கின்றன.

 இதைப் படித்தால் இடையூறுகள் தடங்கல்கள் முதலிய பயங்கள்
நீங்கும். எல்லாவற்றிலும் வெற்றி கிட்டும். படிப்பவர்களுக்குப் படிப்பும், தனம் வேண்டுபவர்களுக்கு  தனமும், மக்கள் செல்வம் வேண்டுபவர்களுக்கு மக்களும், மோட்சம்  வேண்டுபவர்களுக்கு உரிய கதியும் கிட்டும்.
 

தோத்திரத்தின் ஆரம்பத்திலேயே போட்டிருக்கிறது, பார்த்தீர்களா -
"ஆயுர் காமார்த்த ஸித்தயே". அதை மனதில் இருத்திக்கொண்டு
ஸ்ரீ சங்கடநாஸன கணபதியிடம் உங்களின்  சங்கடத்தைத் தெளிவாக
எடுத்துரைத்து அதை நீக்குமாறு  சங்கல்ப்பத்தைச் செய்து படியுங்கள்.
கடைசி வரியில்  'நாத்ர ஸம்ஸய' என்று காணப்படுகிறது அல்லவா? 
சந்தேகமே படக்கூடாது. முழுநம்பிக்கையோடு வேண்டுதல்  செய்து
படிக்கவேண்டும்.

        நாரத உவாச -

ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீபுத்ரம் விநாயகம்
பக்தாவாஸம் ஸ்மரேந் நித்யம் ஆயு:காமார்த்த ஸித்தயே

          தீர்க்காயுள் ரோகமில்லாத வாழ்க்கை, செல்வம், சுகம் இவைகளை
விரும்புபவர் கௌரியின் புத்திரனைவேண்டி இந்த ஸ்லோகத்தைச்
சொல்லி நமஸ்கரிக்கவேண்டும்.

ப்ரதமம் வக்ரதுண்டம் ச ஏகதந்தம் த்வீதீயகம்
த்ருதீயம் க்ருஷ்ணபிங்காக்ஷம் கஜவக்த்ரம் சதுர்த்தகம் 

            வளைந்த துதிக்கையை உடையவரே! ஒற்றைத் தந்தம் கொண்டவரே!
லேசாகச்சிவந்த விழிகளால் பக்தர்களை அனுக்ரஹிப்பவரே! யானை
முகத்தவரே!

லம்போதரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகடமேவ ச
ஸப்தமம் விக்நராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டமம்

            சரிந்த தொந்தி உடையவரே! மதஜாலப் பெருக்கை உடையவரே!
விக்னேஸ்வரரே! கருஞ்சிவப்பு நிறமுடையவரே!

நவமம் பாலசந்த்ரம் ச தஸமம் து விநாயகம்
ஏகாதஸம் கணபதிம் ச த்வாதஸம் து கஜாநநம் 

            நெற்றியில் சந்திரனை உடையவரே!  கணங்களின் தலைவரே!
விநாயகரே! யானை முகத்தவரே!

த்வாதஸைதாநி நாமாநி த்ரிஸந்த்யம் ய: படேந் நர:
ந ச விக்நபயம் தஸ்ய ஸர்வ ஸித்திகரம் ப்ரபோ

            இந்தப் பன்னிரண்டு  பெயர்களையும் மூன்று வேளைகளிலும்
படிப்பவர்கட்கு இடையூறு நீங்கி எடுத்த காரியம் வெற்றி அடைகிறது.   

வித்யார்த்தி லபதே வித்யாம் தநார்த்தீ லபதே தநம்
புத்ரார்த்தி லபதே புத்ராந் மோக்ஷ¡ர்த்தீ லபதே கதிம் 
           
 கல்வியை விரும்புபவருக்குக் கல்வியையும், செல்வத்தை
வேண்டுவோருக்கு செல்வமும், மக்கட் பேற்றை விரும்புபவர்க்கு
குழந்தைச் செல்வத்தையும், மோட்சத்தைக் கோருகிறவருக்கு
மோட்சமும் கிடைக்கிறது.

ஜபேத் கணபதிஸ்தோத்ரம் ஷட்பிர் மாஸை; பலம் லபேத்
ஸம்வத்ஸரேண ஸித்திம் ச லபதே நாத்ர ஸம்ஸய:

 இந்தக் கணபதி ஸ்தோத்திரத்தை பயபக்தியுடன் விடாமல் ஆறு
மாதங்கள்  சொல்பவர்க்கு நினைத்த காரியம் ஈடேறும்.படிப்பவர்களுக்கு
அட்டமா சித்தியும் கைகூடும் என்பதில் சந்தேகமில்லை.

அஷ்டப்யோ ப்ராஹ்மணேப்யஸ்ச லிகித்வா ய:ஸமர்ப்பயேத்
தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேசஸ்ய ப்ரஸாதத:

 எட்டு கணேச பக்தர்களுக்கு  இந்த ஸ்லோகத்தை எழுதிக் (கற்றுக்
கொடுப்பவருக்கு) எல்லாக் கலைகளும் விநாயகர் அருளால் சுலபமாக 
வரும் என்று நாரத மகரிஷி ஆசீர்வதித்தார்.

        இதி நாரத புராணே ஸங்கஷ்டநாஸன ஸ்ரீ கணேச ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்
  

கருட புராணம்

கருட புராணம் , மார்க்கண்டேய புராணம்



:

ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர்.

உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு அளித்தல் வேண்டும். ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.

1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.
2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.
3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.
4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.
5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.
6. பெற்றோர், மற்ற பெரியோர்களைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.
7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.
8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.
9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.
10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.
11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.
12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.
13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.
14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.
15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.
16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.
17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.
18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.
19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.
20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.
21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.
22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷரகர்த்தமம்.
23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ரக்ஷணம்.
24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.
25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.
26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.
27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.
28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.


தாமிஸிர நரகம்: பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.

அநித்தாமிஸ்ர நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.

ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.

மகா ரௌரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.

காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.

அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.

பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.

அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.

சான்மலி: நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.

வைதரணி: நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.

பூபோதம்: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.

பிராணி ரோதம்: பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.

விசஸனம்: பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.

லாலா பக்ஷம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.

சாரமேயாதனம்: வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.

அவீசி: பொய்சாட்சி சொன்னால்  நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள்.

மார்க்கண்டேய புராணம் கூறும் பாவத்திற்கேற்ற தண்டனைகள்:

1. பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின் கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும்.
2. குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக் கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் பிடுங்கப்படும்.
3. விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன் மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் கொள்ளச் செய்யப்படுவர்.
4. அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன் கால்கள் வெட்டப்படும்.
5. தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக் கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும்.
6. தீர்த்தத்தில் மலம், சிறுநீர் கழிப்பவன் கல்லுக்குள் தேரையாய்ப் பிறப்பான்.
7. நீசனிடம் தானம் கேட்டோர், யாசகர், குருவிடம் பொய் கூறியோர் நாயாகப் பிறப்பர்.
8. தானியத்தை திருடியவன் எலியாகவும், சகோதரர் மனைவியைக் கெடுத்தவன் குயிலாகவும், குரு பத்தினியைக் கூடியவன் பன்றியாகவும், உணவு பால் திருடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத தீயில் ஓமம் செய்தவன் செரிமானம் இன்றி அவதிப்படுபவனாகவும் பிறப்பர். இப்படி வேறு, வேறு பாவங்களுக்கு ஏற்ப ஏராளமான தண்டனைகள் நரகத்தில் அளிக்கப்படும். எனவே மனிதன் பாவத்திற்கு ஏற்ற தண்டனை நரகில் நிச்சயம் என்று அறிந்து புண்ணியத்தையே சம்பாதிக்க வேண்டும்.

நன்றி : தினமலர்

பிரஹஸ்பதி ஸ்தோத்திரம்
ஸ்காந்த புராணத்தில் உள்ள அற்புதமான ஸ்தோத்திரம் இது. இதைப் படிப்பதால் வயிற்றுவலி, குன்மம் முதலான ரோகங்கள் விலகும். பலம், பொருள், ஸந்தானம், தீர்க்காயுள் கிட்டும். பாவங்கள் விலகும். கோசார ரீதியாக 1, 3, 8, 12 ஆகிய இடங்களில் குரு இருந்தாலும், ஜாதகத்தில் தோஷம் உள்ளவனாக இருந்தாலும்... அதனால் ஏற்படக்கூடிய தோஷங்களும் விலகும்.
ஸ்ரீ கணேஸாய நம:
குருர்ப்ருஹ ஸ்பதிர்ஜீவ: ஸுராசார்யோ விதாம் வர:
வாகீஸோ திஷணோ தீர்கஸ்மஸ்ரு: பீதாம்பரோ யுவா
ஸுதாத்ருஷ்டிர் க்ரஹாதீஸோ க்ரஹபீடாபஹாரக:
தயாகர: ஸெளம்யமூர்த்தி: ஸுரார்ச்ய: குட்மலத்யுதி:
லோகபூஜ்யோ லோககுருர் நீதிக்ஞோ நீதிகாரக:
தாராபதிஸ்சாங்கிரஸோ வேதவேத்ய: பிதாமஹ:
பக்த்யா ப்ருஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா நாமான்யேதானிய: படேத்
அரோகீ பலவான் ஸ்ரீமான் புத்ரவான் ஸ பவேந்நர:
ஜீவேத்வர்ஷஸதம் மர்த்யோ பாபம் நஸ்யதி நஸ்யதி
ய: பூஜயேத்குருதினே பீதகந்தாக்ஷதாம்பரை:
புஷ்பதீபோபஹாரைஸ்ச பூஜயித்வா ப்ருஹஸ்பதிம்
ப்ராஹ்மணான் போஜயித்வா ச பீடாஸாந்திர்பவேத் குரோ:
கருத்து:
குருவும், பிரஹஸ்பதியும், ஜீவனும், தேவர்களுக்கு ஆசார்யரும், புத்திமான்களுள் சிறந்தவரும், வாக்குக்கு ஈஸ்வரரும், புத்தி ரூபியும், நீண்ட தாடி, மீசை உள்ளவரும், பீதாம்பரம் தரித்தவரும், யௌவனம் உள்ளவரும்,அமிர்தமயமான பார்வை உள்ளவரும், கிரகங்களுக்குத் தலைவரும், கிரகங்களின் பீடையைப் போக்குகிறவரும், கருணைக்கு இருப்பிடமானவரும், அழகிய உருவம் கொண்டவரும், தேவர்களால் பூஜிக்கத் தகுந்தவரும், மொட்டு போன்ற காந்தியுள்ளவரும்உலகங்களால் பூஜிக்கத் தகுந்தவரும், லோக குருவும், நீதிசாஸ்திரம் அறிந்தவரும், நீதியைச் சொல்கிறவரும், அங்கிரஸ்ஸினுடைய புத்திரரும், வேதங்களால் அறியத் தகுந்தவரும், பிதாமகனுமாகத் திகழும் குருவின் நாமங்களை படிப்பவர்கள் ஆரோக்கியமாகவும், பலவானாகவும், ஸ்ரீமானாகவும், புத்திரவானாகவும் திகழ்வார்கள். அத்துடன், அவர்கள் 100 ஆண்டுகள் ஜீவித்திருப்பார்கள். பாவங்கள் விலகும்.
எவர் ஒருவர் வியாழக்கிழமையாகிய குருவாரம் அன்று சந்தனம், அக்ஷதம், வஸ்திரம் - இவைகளாலும், புஷ்பம், தீபம் முதலான உபகாரங்களாலும் பிரஹஸ்பதியை பூஜிப்பாரோ, அவ்வாறு பூஜித்து பிராமணர்களுக்கு போஜனமும் செய்து வைக்கிறாரோ, அவருக்கு குருவினால் ஏற்பட்ட பீடைகளும் விலகும்.
 நன்றி : சக்தி விகடன் 


கோவிலில் வீற்றிருக்கும் கடவுளுக்கு தினமும் அபிஷேக அலங்காரப் பூஜைகள் நடக்கும். இந்த அபிஷேகத்துக்கான பொருள்களாக எந்தெந்த பொருட்களை வழங்குவதன் மூலம் என்னென்ன பலன்கள் பெறலாம் என்று பார்ப்போம். 

பஞசாமிர்தம் - வெற்றி 

பால் - நீண்ட ஆயுள் 

தேன் - இசை ஞானம் 


நெய் - சுகமான வாழ்வு

விபூதி - நல்ல மக்கள்பேறு

பன்னீர் - புகழ்

சந்தனம் - சொர்க்க வாழ்வு

பூக்கள் - மகிழ்ச்சி

குங்குமம் - 
மங்களம்