Friday, August 9, 2013

அபிஷேகத் தத்துவம்

பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறுகிறது. 

இவைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தத்துவம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது நல்லது. 

தூய நீர்- தூய வாழ்கை வாழ வேண்டும் என்ற நமது எண்ணத்தை நீர் அபிஷேகத்தால் அம்பாளிடம் வெளிப்படுத்துகிறோம். 

மஞ்சள்- மங்களமும், ஆரோக்கியம் பெருக வளம் கொண்ட வாழ்வைப் பெற மஞ்சள் அபிஷேகம் செய்யப்படுகிறது. 

பால்- களங்கமற்ற மனம் வேண்டி செய்யப்படும் அபிஷேகம் பாலாபிஷேகம். 

சந்தனம்- தேயத்தேய சந்தனம் மணப்பது போல் பிறருக்காக உழைத்து, வாழ்க்கையில் தியாகம் புரிவதைக் குறிக்கும். 

பன்னீர்- பன்னீர் போன்ற தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கும். 

விபூதி- இந்த உலகில் என்னதான் அனுபவித்தாலும் இறுதியில் எல்லாம் ஒரு பிடி சாம்பல்தான் என்பதை விபூதி அபிஷேகம் உணர்த்தும்.

No comments: